அரிசியல்
அரிசியல்.
ஆம், அரிசி அரசியல்.
1968-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமம். நில உடைமையாளர்களால் நாற்பத்தி நான்கு விவசாய கூலிகள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.
அனைவரும் ஊரை விட்டு ஒதுக்கி,ஒடுக்கி வைக்கப்பட்ட எளிய உழைக்கும் மக்கள்.பெரும்பாலோனோர் அதில் உடல் பலம் குறைந்த பெண்களும், பால்மணம் மாறாத பிஞ்சுக்குழந்தைகளும் அடக்கம்.
கதறி ஓடிய நான்கு வயது பச்சிளம் பெண் குழந்தையை தூக்கி தீயில் எரிந்தார்கள். செய்த குற்றம்? அவள் தாய் தந்தையர்க்கு பிறந்தது மட்டும்.
அவர்கள் செய்த குற்றம்? நியாயமான கூலி உயர்வை கேட்டதுதான்.
நில உடைமையாளர்கள் வெறி கொண்டு அழைந்தார்கள்.அந்த அப்பிராணி மக்களை தேடித்தேடி தீயிலிட்டு கொழுத்தினார்கள்.
அந்த கால கட்டத்தில் மிக பெரும்பான்மையான நில உடைமைகள், எண்ணிக்கையில் மிக குறைந்த மேல் சாதியினர் இடமே குவிந்திருந்தது.
மாறாக, எண்ணிக்கையில் பெரும்பான்மையான நடுத்தர, ஒடுக்கப்பட்ட மக்கள் நிலமற்ற கூலிகளாகவும், குத்தகைகாரர்களாகவும் இருந்தனர்.
வெண்மணிச் சம்பவத்திற்கு பிறகு நில உச்ச வரம்புச்சட்டம் இயற்றப்பட்டது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் பிரித்தளிக்கப்பட்டது.
நீர் பிடிப்பு பகுதிகளில் இருபோகம் நெல் விளைந்தால் பெரும்பாலான நீர்பிடிப்பு இல்லாத பகுதிகளில் ஒருபோக விளைச்சலே பேரதிசயம்.
சாப்பிடுவதற்கே உடைமைகளை அடகு வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது.உடைமைகளும் சொற்பம்தானே!அடுத்த கட்டம் வட்டிக்கு நெல் வாங்கும் வழக்கம் வந்தது.வாங்கும் நெல்லை வட்டியுடன்(நெல்) அடுத்த அறுவடையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.அதுவும் தீர்ந்த பின் நிலவுமையாளர்களிடம் 'சோற்று நெல்' வேண்டும் என்று வீதியில் மன்றாடி நிற்பது அன்றைக்கு அன்றாடக் காட்சி.
இது தவிர, இயற்கைச் சீற்றம் உண்டாக்கும் பட்டினியும் பட்டினிச் சாவுகளும்.இப்படியெல்லாம் சோற்றுக்கு மக்கள் அலைந்த காலத்தில் அவர்களுடைய சுதந்திரமும் சுயமரியாதையும் என்ன கதியில் இருந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
1960-களின் முற்பகுதியிலிருந்தே இதே நிலைதான்.மக்களோடு மக்களாக திராவிட இயக்கம் மிகவும் ஒன்றி இரண்டற கலந்ததிருந்தது.மக்களின் பிரச்சனைகளை இன்றும் சரி அன்றும் நன்கு அறிந்து வைத்திருந்தது.
அதுவே 1967ல் 'ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி' என்று தேர்தல் வாக்குறுதி தந்து முதல்முறையாக திமு கழகம் வென்று,அந்த திட்டத்தை செயல்படுத்தியும் காட்டியது.
அதன் நீட்சியாகத்தான் 2018-ல் ஒரு ரூபாயும் வாங்காமல் அரிசி வழங்கும் திட்டம் பொருளாதார அறிஞர்களும் வியந்து பாராட்டும் நல்ல திட்டமாக தொடர்கிறது.
இன்றெல்லாம் 'பட்டினிச்சாவு' என்னும் சொல்லை கூட வெகுஜன மத்தியில் கேட்டிருக்க மாட்டோம்.இன்றும் இலட்சோப இலட்ச குடும்பங்களின் உணவு தேவையில் பெரும் செலவை குறைத்த அற்புதமான இந்த 'அரிசியல்' புரட்சி திராவிட இயக்கத்தின் மகத்தான ஒரு சாதனை!
இலவச அரிசி தானே என்று எள்ளாடுபவர்களுக்கு அந்த அரிசி ஏற்படுத்திய வரலாற்று இரணங்கள் கிஞ்சின்றூண்டும் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள் அல்லது அறிந்திருக்க கூட மாட்டார்கள்!
Credit : கௌதம் பரமேஸ்வரன்.
கலைஞரிஸ்ட் : Facebook Page
கலைஞரிஸ்ட் : Twitter Account
கலைஞரிஸ்ட் : Youtube Channel
#ThankYouகலைஞர் #ThankYouMK
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺
#கலைஞரிஸ்ட் - #kalaignarist
Comments
Post a Comment