அணைகள் கட்டிய நவீன கரிகாலன் | திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள்

காமராஜர் ஆட்சிக்குப்பின் தமிழகத்தில் அணைகளே கட்டவில்லையா?


மேட்டூர்,ஆழியார்,பவானிசாகர் என நாம் அன்றாடம் செய்திகளில் கேள்விப்படும் அணைகளின் பெயரை தவிர்த்து தமிழகத்தில் வேறு ஏதேனும் ஐந்து அணையின் பெயரை கேட்டால், அணைகளே இல்லை!! என ஒரு அறிவுப்பூர்வமான(?) பதிலை தருவார்கள்...


மேலும் காமராஜர் ஆட்சிக்குப்பின் அணைகள் கட்டியிருந்தால் தானே அணைகள் இருப்பதற்கு என்பர்!!

அன்றே கல்லணையெல்லாம் கட்டினார்கள், ஆனால் இந்த திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக அணைகள் எதுவுமே கட்டவில்லை என்பர்!!


கல்லணை என்ற பெயரில் 'அணை' இருப்பதால் அது நீர் தேக்கப்பயன்படும் அணைக்கட்டாகிவிடாது.

முன், பின் கல்லணையை பார்த்தவர்களிடம் கேட்டால் அது ஒரு மிகப்பெரிய மதகு என்பர்.மதகு என்பது, காவிரியில் வரும் நீரை நாலாபுறமும் பிரித்து அனுப்ப பயன்படும் ஒரு கட்டிட வடிவம்..அவ்வளவே!!


மேட்டூர், மேடான பகுதியில் அமைந்த ஊர்.அந்த ஊரில் இரு மலை முகடு/இடுக்கின் வழி செல்லும் நதி, காவிரி.அது, அணை கட்ட இயற்கையாக அமைந்த புவியியல் அமைப்பு.

 ஆசியாவிலே மிகப்பெரிய அரைவட்டவடிவான இடுக்கி அணை அமைந்த பகுதியும் மேட்டூர் போன்ற மேடான பகுதி தான்.

பவானிசாகர் அணை அமைந்த பகுதியானது, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம்.

42 கிராம வாசிகளை தங்கள் இடத்திலிருந்து துரத்தி விட்டு அமைக்கப்பட்ட அணைப்பகுதி தான் பவானிசாகர்,மேடான பகுதி தான்..பில்லூர் அணை, ஆழியார் போன்ற பெரிய அணைகள் கூட மேற்குத்தொடர்ச்சி மலையில் மேடான பகுதியில் அமைந்த அணைகள் தான்...

இது போன்ற மேடான புவிப்பரப்பானது பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையே ஒட்டியே தமிழ் நாட்டில் அமைந்து உள்ளது.

இப்படியான புவியியல் சவால்களையும் சமாளித்து திமுக ஆட்சியில் கட்டிய அணைகளின் பட்டியல்,இதோ!!


1. மணிமுக்தாநதி = 20.62 மில்லியன்.கன.மீட்டர்.
2. சின்னார் = 13 மி.க.மீ.
3. ராஜதோப்புகிணர் = 00.58 மி.க.மீ.
4. செண்பகத்தோப்பு = 8.13 மி.க.மீ.
5. வரட்டார் =3.12 மி.க.மீ.
6. ஆண்டியப்பனூர் ஓடை = 3.18 மி.க.மீ.
7. மஞ்சளார் =13.18 மி.க.மீ.
8. சித்தார் 1 =16.99 மி.க.மீ.
9. சித்தார் 2 = 11.13 மி.க.மீ.
10. கட்னா = 9.97 மி.க.மீ.
11. இராமாநதி = 4.30 மி.க.மூ.
12. பிளவுக்கல் பெரியார் = 5.44 மி.க.மீ.
13. பிளவுக்கல் கோயிலார் = 3.77 மி.க.மீ.
14. பிளவுக்கல் கோயிலார் = 4.52 மி.க.மீ.
15. கருப்பாநதி =5.21 மி.க.மீ.
16. அனைக்குட்டம் = 6.66 மி.க.மீ.
17. நம்பியாறு = 2.23 மி.க.மீ.
18. பொய்கையாறு = 2.97 மி.க.மீ.
19. பரப்பலார் = 5.60 மி.க.மீ.
20. பெரும்பள்ளம் =3.28 மி.க.மீ.
21. குதிரையாறு =7.16 மி.க.மீ.
22. நொய்யல் ஆத்துப்பாலம் =6.46 மி.க.மீ.
23. நிரார் மேல் அணை = 1.10 மி.க.மீ.
24. பெருவரிப்பள்ளம் = 11.02 மி.க.மீ.
25. சோலையார் =152.5 மி.க.மீ.
26. நங்கஞ்சியார் =7.02 மி.க.மீ.
27. பொன்னியாறு = 3.40 மி.க.மீ.
28. உப்பார்(ஈரோடு)  =4.62 மி.கி.மீ.



பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால் இயற்கையான மலை முகடுகள் அவசியம். ஆகையால் பெரிய அணைகள் என்பவையெல்லாம் அரசர்,ஆங்கிலேயர் காலம் தொட்டு காங்கிரஸ் ஆட்சி காலம் வரை கட்டினார்கள்.


இதை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கலைஞர் தேவை மற்றும் இயற்கை ஒத்துழைக்கும் இடங்களை தேர்வு செய்து அணைகளை கட்டினார்.

இதுபோக ஏரி,குளம்,குட்டைகள் அனைத்தும் மழை காலங்களுக்கு முன்பு அந்தந்த வருடங்களில் சரியான நேரத்தில் தூர்வாரப்பட்டு, பராமரித்து வந்தது திமுக அரசு.


திமுக வின் மீது பரப்பப்டும் வதந்திகளில் ஒன்று, திமுக அணைகளே கட்டவில்லை என்பது...

ஆனால், மேற்சொன்ன அதிகாரப்பூர்வ அணைப்பட்டியல்,புள்ளி விவரங்களை வைத்து சந்தேகமின்றி சொல்லாம், திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் அதிக அணைகள் கட்டப்பட்டது!!

#ThankYouகலைஞர் #ThankYouMK

கலைஞரிஸ்ட் : Facebook Page

கலைஞரிஸ்ட் : Twitter Account

கலைஞரிஸ்ட் : YouTube Channel

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺

#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Comments