கருணாநிதி கடைசியாக நடித்த நாடகம்
கருணாநிதி கடைசியாக
நடித்த நாடகம்.!!
இந்த நாடகத்தை ஏன் நடத்தினார்
நாடகத்தை பாதியில் நிறுத்தும் அளவுக்கு யாரால் மிரட்டி விரட்டப்பட்டார்
இப்போது இவரை கீழே விடாமல் தூக்கிச்சுமக்கும் இராவண கோபால், பெரியாரின் பேரன் நான் போன்ற உணர்வாளர்கள் தெளிவுப்படுத்தவும்.
என்று நண்பர் Venkatesan Venky கேட்டிருந்தார்...
அன்பு நண்பரே , கலைஞரின் நாடகம் பற்றியும் ஈழப்போரின் இறுதி நிகழ்வுகள் பற்றியும் தெளிவுபடுத்த எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.
கருணாநிதியின் நாடகத்தை பிறகு பார்ப்போம்...
முதலில் முதலமைச்சர்களின் அதிகாரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 164(1) ன் படி, ஒன்றிய பிரதமருக்கு உத்தரவிடும் அதிகாரம், மாநில முதல்வர்களுக்கு இல்லை.
இந்நிலையில், உலக நாடுகள் முழுமையாக ஒன்றிணைந்து புலிகளை ஒழிக்க நடத்திய போரை தடுத்து நிறுத்த ஒரு மாநில முதல்வரான கலைஞரால் எப்படி முடியும்?
இந்நிலையில், மேதகு பிரபாகரனும் ஏனைய புலிகள் அமைப்பகளும் எப்படியாவது கலைஞர் போரை நிறுத்தி விடுவார் என்று எண்ணியிருக்க வாய்ப்பில்லை.
கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும். இந்திய ஒன்றியத்தின் முடிவினை எதிர்த்து புலிகளை தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் கலைஞருக்கும் தெரியும்.
அதே சமயம், ஈழத்தாய் குழுமத்தால் 'ராஜிவ் காந்தி' கொலைப்பழியைச் சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதும் கூட புலிகளுக்கு தெரியும்.
பிறகேன் இந்த உண்ணாவிரத நாடகம் ?
"அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது" என்ற கோரிக்கையை முன்வைத்தே கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இலங்கை அரசின் கனரக ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பிரயோகிக்க இந்திய அனுமதிக்காது, என்ற உத்திரவாதத்தை பிரணாப் முகர்ஜி காண்பித்த பின்னரே கலைஞர் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
அப்போதும் கூட உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவாறே , ஈழத்தந்தை செல்வாவின் மகனிடம் உரிய விவரங்களை கேட்டறிந்த பின்னரே கலைஞரின்
உண்ணாவிரதம் (உங்கள் பார்வையில் "நாடகம்") வாபஸ் ஆனது.
இனி சில கேள்விகளை முன் வைக்கிறேன்....
பதில் கூற முடிகிறதா என பாருங்கள்.
1. கலைஞர் அனுமதியுடன் திமுக சார்பில் புலிகளை காப்பாற்ற எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்பதும் உங்களுக்கு தெரியாதா?
2. கலைஞர் எடுத்த முடிவுகளுக்கு,
உரிய ஒத்துழைப்பை ஈழப் போரின் இறுதிகட்ட நாள்களில் புலிகள் வழங்கினார்களா ?
3. கலைஞர் இறந்த பின்னும் வன்மம் கொண்டு, பெ.ம, சீமான் போன்ற போலி தமிழ்தேசியவாதிகளும், ஈழத்தமிழர் ஆதரவு முகமூடியுடன் உலாவரும் சில பார்ப்பன அடிமைகளும் செய்து வரும் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களை
விபரம் தெரிந்த ஈழத்தமிழர்கள் ஏற்றார்களா ?
4. கலைஞர் மட்டுமே தனி ஈழத்தை பெற்றுத் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கினார்களா ?
5. கலைஞரின்அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு தெரியாதா ?
6. புலிகளால் டெலோ அழிக்கப்பட்ட சகோதர யுத்தம் காரணமாக, தான் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக
கலைஞர் அறிவித்தாரா ?
7. அப்படியிருந்தாலும் ,அதன் பின்னர் கலைஞர் புலிகளை ஆதரிக்கவில்லையா ?
8. இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, தனியொருவனாக இருந்து, அசாத்திய துணிச்சலுடன் கலைஞர் ஆதரிக்கவில்லையா ?
9. இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்து தேசத்துரோகி பட்டத்தையும் சுமந்த கலைஞர் புலி ஆதரவு நிலைப்பாட்டால் ஆட்சியை இழக்கவில்லையா ?
10. ராஜீவ் படுகொலை என்ற ஒரு 'துன்பியல் நிகழ்விற்கு' பின் 1991 தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியை இழந்தது யாரால் ?
11. 1991 ம் ஆண்டிற்கு பிறகு கொண்டு வரப்பட்ட 'தடா' சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் இருந்தனரா ?
12. இறுதிப்போரை நிறுத்தும் அதிகாரம் மாநில முதல்வர் கலைஞரிடம் இருந்ததா ?
"ஏன் திமுகவின் MP......"
கொஞ்சம் பொறுங்கள்....
அந்த விசயத்திற்கு நானே வருகிறேன்.
அப்போது பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் .
அதானே !
அப்படி ராஜினாமா செய்வதன் மூலம் எந்தவொரு magic ம் நடந்திருக்காது.
அப்போதே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார் "ஈழத்தாய். அதைத்தான் விரும்புகிறீர்களா ?
இறுதி போரின்போது சர்வதேச நாடுகளின் திரைமறைவு அரசியல் மற்றும் இராணுவ திட்டங்கள், போலி தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியுமா ?
கடைசி சில நாட்கள் நடந்த இறுதிப் போர் முழுமையாக இலங்கை இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில்தானே இருந்தது.
ராஜபக்சே நினைத்து இருந்தாலும் அதை தடுத்திருக்க முடியாது.
ராஜபக்சே கேட்டும் சிங்கள படை தளபதி பொன்சேகா மறுத்து விட்டதை இங்கிருக்கும் "ஈழ வியாபாரிகள்" வசதியாக மறுத்துவிட்டதை நாடறியும்.
இந்திய ஒன்றிய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் புலிகள் ஆதரவாளர்கள் மூலமாக மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன.
கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேற்கத்திய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.
இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் புலிகள் தோல்வியுற்றதற்கு ஒரு வலுவான காரணமாக இருந்தது.
இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கேடயமாக வைக்கப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன.
ஆனால், அப்பாவி பொதுமக்களை விடுவித்துவிட்டால், புலிகளின் அழிவு உறுதிப் பட்டுவிடும் என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்தனர்.
அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருந்த புலிகளிடம், அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த 'வைகோ' அவர்கள் கொடுத்த உறுதிமொழி ஒன்று, மேலும் புலிகளின் தோல்வியை உறுதிப்படுத்தியது.
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ கூறிய தகவலை புலிகள் அப்படியே நம்பி ஏமாந்தனர்.
ஆனால் போர்க்கள நிலவரம் வேறுமாதிரியாக மாறியது.
புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்தன.
மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், “அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்” என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.
முடிவு நாம் அனைவருக்குமே ஏமாற்றத்தைத் தந்தது.
தமிழக புலி ஆதரவாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரின் துரோகங்களை மறைப்பதற்கும்,
புலிகள் செய்த அனைத்து தவறுகளையும் குற்றங்களையும்
மறைப்பதற்கும் ஒரு "அரவான்" தேவைப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள போலி ஈழ ஆதரவாளர்களால், கலைஞர், "அரவானாக" திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டார்.
இனி மேலும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் பதிவுகளையும் தொடரக் காத்திருக்கும்........
Credit : பெரியாரின் பேரன் நான்
ThankYouMK Kalaignar Karunanidhi DMK4India DMK
திராவிட பேரரசன் 👑
கலைஞர் 🖋
கருணாநிதி 🕶💺
கலைஞரிஸ்ட் - kalaignarist
Comments
Post a Comment