யாருக்கு, யார்.? ஈழ உணர்வை ஊட்டுவது..??




ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை கேட்டால் அந்தக் குடும்பத்தின் அரசியல் பின்னனியை ஓரளவு கணித்துவிடலாம்..

1950-55 களில் இங்கர்சால், பெர்னாட்சா, லெனின், ஸ்டாலின், ஜீவா போன்ற பெயர்கள்;

1960-களில் ராஜேந்திரன், சோழன், மாறன், சேரன், இளங்கோவடிகள், தொல்காப்பியன், நக்கீரன், திருவள்ளுவன், தமிழரசன் போன்ற பெயர்கள்;

1970-களில் அண்ணாதுரை, சம்பத், கருணாநிதி, வீரமணி, நெடுஞ்செழியன் போன்ற பெயர்கள் எந்த வீட்டில் காணப்படும் என்றால் அது நிச்சயமாக திராவிடர் கழகம்  அல்லது திமுக குடும்பத்து பெயர்களாக மட்டுமே  பெரும்பாலும் இருக்கும்.  

உதாரணமாக தற்போது கடலூரில் நான் வசிக்கும் வீடு என் நண்பரிடம் இருந்து வாங்கியது. மலேசியாவில் குடியுரிமை பெற்றுவிட்ட குடும்பம்.. அவர்கள் வீட்டில் முதல் மகனின் பெயர் கருணாநிதி, அடுத்து அண்ணாதுரை மூன்றாம் மகனின் பெயர் வீரமணி.  திராவிட குடும்பத்து வீடு. 

காரணம் என்ன தெரியுமா.? 

எங்கள் இயக்கங்களின் பொதுக்கூட்டங்கள் என்பது மாலை நேர பல்கலைக்கழகங்களுக்கு நிகரானதாக இருந்து. 

உலக வரலாறுகள், இலக்கியங்கள் என அத்தனை அறிவு சார்ந்த தகவல்களை சொல் நயத்துடம் பாடம் நடத்திய பொதுக்கூட்டங்கள் ஏராளம். 

இந்த வரிசையில் தான் 1984ஆம் ஆண்டுக்கு பிறகு பல திமுககாரர்களின் வீடுகளில் சூட்டிய பெயர் பிரபாகரன். 

இப்பவும் பிரபாகரன் என்ற பெயருடைய முப்பது வயதை தொட்டவர்களின் தகப்பனார்கள் பெரும்பாலும் திமுககாரராகவே இருப்பார். அது வெறும் பெயரல்ல. உணர்வின் அடையாளம். மற்றவர்களைப் போல பேக் ஐடிக்கு வைத்துக் கொண்ட பெயர் அல்ல.  

யாருக்கு யார் ஈழ உணர்வை ஊட்டுவது..?? 

கஞ்சா கடத்தல், சாயாரம் கடத்தல் மாதிரி செய்தி கடத்தல் கேள்விப்பட்டு இருக்கீங்களா? இப்போது போல வாட்ஸ் அப், முகநூல் இல்லை. 

இலங்கையில் நடக்கும் போரின் படங்கள் கோடியக்கரை வரை வரும். அதனை சிவகாசிக்கு கொண்டு போய் போலீஸுக்கு தெரியாமல் அச்சடிக்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட படங்களை ஊர் ஊராக அனுப்ப வேண்டும். இதெல்லாம் யார் செய்தது.  இன்று வெவ்வேறு இயக்கத்தில் இருக்கலாம் ஆனால் அன்று திமுகவில் அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே செய்தனர். 

1970-களில் பிறந்த எனக்கு அரசியல் புரியத் தொடங்கிய காலத்தில் தெரிந்த  அரசியல்வாதிகள் என்றால் தலைவர் கலைஞரை தெரியும். அவருக்கு எதிரி என்ற முறையில் மகோ.ரா[MGR]வை தெரியும். 

அதன் பின் தெரிந்த ஒரே பிரபலம் பிரபாகரன். 

1990-களில் பதின்ம வயதைத் திட்ட பலர்  பள்ளிக் கூட , கல்லூரி நாட்களில் பிரபாகரன் பற்றி பெருமைப் பேசாதவர்கள் உண்டா? நிச்சயம் அதற்கான வாய்ப்பே இல்லை.  

அந்தளவுக்கு பிரபாகரன் என்ற பிம்பம் கட்டியமைத்ததில் , கட்டிக்காத்ததில் திமுகவிற்கும் , தலைவர் கலைஞருக்கும் பெரும்பங்கு உண்டு

பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை அவரும் கலைஞரை வாய் தவறியும் தவறாக பேசியதில்லை. தலைவரும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை.  இருப்பினும் இன்று பிரபாகரனுக்கு எதிராக பதியப்படும் பதிவுகளுக்கு யார் காரணம்? 

பிரபாகரனுக்கு மரியாதை வாங்கித் தருகின்றோம் என ப்ரொபைலில் பிரபாகரன் படத்தை வைத்துக் கொண்டு தலைவர் கலைஞரை, திமுகவை திட்டியதின் விளைவு தான்.  தமிழ் தேசியவாதிகளால் பிரபாகரனுக்கு எவ்வளவு இழிவை மட்டுமே தேடித்தர முடியும் என்பது இப்போதாவது புரிகின்றதா? 

இவர்கள் கலைஞரை திட்டவில்லை என்றால் உடன்பிறப்புகளால் பிரபாகரன் என்ற பிம்பமும் உடையாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.  

கலைஞரை சாடுவதற்காக , திமுகவை குறை சொல்வதற்காக கையில் எடுக்கப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கிப் போனது. 

வனவாசம் பற்றி பேசுவார்கள். அதற்கு பதிலாக , அதே கண்ணதாசன் பத்தாண்டு கால பிரிவிற்கு பின்னர் வருந்தி  கலைஞர் என் காதலன் , நீயே கலைஞன், நீயே கவிஞன், நியே  தலைவன் என எழுதியதும்,  தனக்கு இரங்கல் கவிதை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதையும் இவர்கள் வாசிக்கவில்லை. அவர்கள் எதையுமே தேடி வாசிக்கவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை

அடுத்து காமராசரை  ஆயுதமாக கையில் எடுத்தார்கள். அணைக்கட்டினார் என்றார்கள். எண்ணிப்பார்த்த போது திமுக ஆட்சிகாலத்தில் தான் அதிக அணைகள் கட்டப்பட்டன என வரலாற்று பூர்வமாக நிருபீக்கப்பட்டது

மதிய உணவைத் தாண்டி காமராசரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ன எனக் கேட்ட போது எங்களை நோக்கி ஆட்காட்டி விரல் நீட்டினார்களே தவிர திடடங்களை என்ணுவதற்கு விரல் விட முடியாமல் நின்றார்கள். 

அடுத்து எம்.ஜி ஆருக்கு புரட்சி வேசம் போட்டு கையில் வீரவாள் கொடுத்து நிறுத்தினார்கள். அது இந்திராவின் அச்சுறுத்தலுக்கு பயந்த அதிபுரடசியாளன்,  திரைக்கு வெளியே தைரியம் என்பதே கிடையாது, ஆண்மைக்கான அடையாளமே தெரியல என அடித்து துவம்சம் செய்யப்பட்டது. 

இப்படியாக கண்ணதாசன், காமராசர்,  எம்.ஜி.ஆர் ,  நெடுமாறன், சர்க்கார் கமிஷன் என்ற ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கி போன நிலையில் தான் பிரபாகரன் என்ற ஆயுதத்தை ஏந்தினார்கள்

பாய்ந்து வரும் ஈட்டிக்கு மார்பு காட்டி மடிபவன் வீரன்  நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எதிர்கொண்டோம்.  எங்களுக்கு எதிராக நீங்கள் இதுப்போன்ற ஆயுதங்களை ஏந்தினால் அதிகபட்சமாக ஒரு தேர்தல் வெற்றியை வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் எங்களின் சமூகநீதி போராட்டம்  மட்டும் தோற்கவே தோற்காது. 

காரணம் கொள்கை உறுதி கொண்ட கலைஞரை  படைத்தலைவராக கொண்டவர்கள் நாங்கள்..

இவர்களுக்கு காமாராசர், கண்ணதாசர், மகோ.ரா, பிரபாகரன் ஆகியோர் எல்லாம் ஆயுதங்களே தவிர அவர்கள் மீது அன்போ, அக்கறையோ துளியளவும் இல்லை ஆனால் 
எங்களுக்கு கலைஞர் தான் எல்லாம். 
திமுக தான் பிரதானம். மற்றதெல்லாம் அதன் பின்னர் தான். 

இந்த வாசகத்தை இன்று சொல்லவில்லை. 2009- 2010 ல் முகநூலில் பயணித்த கழக முன்னோடிகளும் பிரபாகரன் பிம்பத்தை உடைக்க விருப்பமில்லாமல் தற்காத்து வந்தனர். 

2010 - 2011 ல் தான் ஒரு குழுவாக இணைந்து எதிர்தாக்குதல் நடத்தினோம். அதன் விளைவாக பெரியார் திடலில் ஒரு சந்திப்பே நடந்தது. அதில்" பிரபாகரன் மீதான தாக்குதல்" சரியா , தவறா? என  விவாதம்  நடந்தது. அப்போது புதியவர்களான நாங்கள்  கூறியது தான் எங்களுக்கு கலைஞர் , திமுக தான் பிரதானம். மற்றதெல்லாம் அதன் பின்னர் தான்.  இன்றைய நிமிடம் வரை அதில் மாற்றமில்லை..

இன்று அந்த பணி  முழுமையாக நடைப் பெறுகின்றது. ஆனால் திமுகவிற்கு  எதிராக  எந்த துரும்பையும் கிள்ளிப்போடாத பிரபாகரனுக்கு இவற்றை பரிசாக அளித்த பெருமைக்குரியவர்கள் இந்த மங்குனி 17 மற்றும் டம்ப்ளர்கள். 

பிரபாகரனை படத்தை முகப்பில்  வைத்து கொண்டு அரசியலில் அறுவடை செய்யத்தான் முனைவார்களே தவிர ஒரு  துளியும் இதற்காக வருத்தப்பட மாட்டார்கள். அவர்கள் ஈழப்பிழைப்பு நடத்தும் ஈனப்போராளிகள். 

ராஜிவ் மரணத்தின் போது திமுகவினரை தவிர வேறு எவனாவது பாதிப்புக்கு உள்ளானீர்களா? 

பிறகென்னடா வெளக்கெண்ணைகளா எங்களுக்கு இன உணர்வை நீங்க பாடம் நடத்துறீங்க. உங்க அப்பன் உடம்பில் இருக்கும் ஈழ சொரனைக்கும் கலைஞர்  தான் அப்பன்.  

தம்பிகளா ஒன்றை நினைவுபடுத்துகின்றேன் கேட்டுக் கொள்ளுங்கள்,  காரணமின்றி கலைஞரை எதிர்த்த ஜெயலலிதாவாகட்டும், பிரபாகரனாகட்டும் அவர்கள் உண்மையாக  மறைந்த தேதி தெரியாமல் தான் அவர்களின் வரலாறு நிறைவடைந்துள்ளது. 

இந்த பட்டியல் நீள வேண்டாம். உண்மையான வரலாற்றை வாசித்து விட்டு வாருங்கள்.

இன்று பிரபாகரன் நினைவுநாள் என்றால் அவரது புகழ்பாடுவதை செய்திருக்க வேண்டும். அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோரின் பிறந்தநாள், நினைவுநாள் ஆகியவற்றை நாங்களும் அனுசரிக்கின்றோம். அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர்களின் பேச்சுகள் எழுத்துகள், விவாதங்கள் என தேடிதேடி எழுதுகின்றோம் ஆனால் யாரையும் தரக்குறைவாக பேசுபதற்கு எந்த பட்டதையும் பயன்படித்தி தலைக்குனிவை ஏற்படுத்தவில்லை.   

சேரர், சோழர்,பாண்டியன் 
நாங்கள் படித்த வரலாறு 
பிரபாகரன் நாங்கள் பார்த்த 
வரலாறு.//  

இப்படியாக எழுத நினைவேந்தல் செய்தோம். 
நாங்களும் பிரபாகரனுக்கு வீர வணக்கம் செய்தவர்கள் தான்.
2010, 2011 களில் இந்த மே17, மே18 தினங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது.  

2011ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். காலை 8மணிக்கு வேலையிடத்தில் அமர்ந்த படி முகநூலில் சில பதிவுகளை வாசித்த போது கண்ணீரை அடக்கமுடியாமல் மறைவிடம் தேடி , ஓடிச்சென்று கதறி இருக்கின்றேன். அரைநாள் விடுப்பெடுத்து வீட்டுக்கு சென்று  ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் . மாலை நேரத்தில் குடும்பத்துடன் பிரபாகரனுக்கு மலரஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். அந்தளவுக்கு எங்களுக்குள் இருந்த ஈழ  உணர்வுகளை வரிகளில் பிரதிபலித்தோம்.   மாறாக ராஜபட்சேவை கூட திட்டவில்லை.  நீங்களோ காழ்ப்புணர்ச்சியை கொட்டுகின்றீர்கள். 

ஆனால் நீங்களோ பிரபாகரனை மறந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் என் தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டி தரம் தாழ்ந்துக் கொண்டிருக்கின்றீர்கள். 

இறுதியாக ஒன்றை சொல்லக் கடமைப்படிருக்கின்றேன். 2012, ஆகஸ்ட் 11ம் தேதி, ஈழம் என்ற சொல்லை  உச்சரிக்கத் மத்திய அரசுத் தடை விதித்த போது உயர்நீதி மன்றத்தை அனுகி 24 மணி நேரத்தில் அந்த தடையை உடைத்த காரணத்தால் தான் நீயும் இன்று ஈழம் என்ற சொல்லை எழுதிக் கொண்டிருக்கின்றாய்.

விடுதலைப்புலிகள் இயக்கிற்கு தடை விதித்த போது "சிறுத்தைகள் உலவலாம், புலிகள் உலவக் கூடாதா?" என கேட்டவர் கலைஞர். 

பார்ப்பன வீட்டுப் பெண்களும் இன்று மொட்டைப்பாப்பாத்தியாக  வீட்டிற்குள் முடங்குவதில்லை. அதற்கு காரணம் பெரியார் என்பது போல நீ ஏந்தும் பிரபாகரன் படத்துக்கும், ஈழம் என்ற சொல்லுக்கும் உரிமையை பெற்றுத் தந்தவர் எங்கள் தலைவர் கலைஞர்

தலைவர் கலைஞர் 
வாழ்க! வாழ்க! வாழ்கவே!

பதிவு : Saravanaprabhum umayal

ThankYouMK  Kalaignar Karunanidhi  DMK4India  DMK

திராவிட பேரரசன் 👑
கலைஞர் 🖋
கருணாநிதி 🕶💺

கலைஞரிஸ்ட் -  kalaignarist


Visit to Like Our Other Sites





Comments