கலைஞர் என்னும் தர்மகர்த்தா.!
தொடர் ; 1️⃣ மதம் என்பது வேறு.! மதவாதம் என்பது வேறு.! இந்து என்பது வேறு.! இந்துத்துவா என்பது வேறு.! சாதி சலுகை என்பது வேறு.! சாதிப் பெருமை என்பது வேறு.! இந்த மூன்றுக்குமான வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் புரிந்து கொண்டால் யாரும் யாரையும் குழப்பமுடியாது. இதில் மதவாதம், இந்துத்துவா, சாதிப்பெருமை ஆகிய மூன்றுக்கும் எதிரான இயக்கம்தான் திராவிட இயக்கம். அதனால் தான் மதவாதிகளும் சாதியவாதிகளும் இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி திரிபுவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாத கோழைகள், மக்களால் புறந்தள்ளப்பட்ட புறமுதுகில் பிறந்தவர்கள், 'இந்துக்களுக்கு எதிரி' என்று மூக்கில் இரத்தம் ஒழுக கனைக்கிறார்கள். தி.மு.க இந்துக்களுக்கு எதிரி என்றால் இக்கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்களா.?? பாரதிய ஜனதாக் கட்சி இந்துக்கள் கட்சி என்றால், எந்த இந்துவும் அக்கட்சிக்கு வாக்களிப்பதில்லையே ஏன்? எல்லா இந்துவுக்கும் தெரியும் பா.ஜ.க., இந்துக்களை வைத்து பிழைக்கும் கட்சியே தவிர இந்துக்களுக்கான கட்சி அல்ல என்று. "இந