கலைஞர் Vs எம்ஜிஆர் - பாகம் : 5

குடியரசு தலைவரும்,
வெள்ளி விழா நாயகனும்.

■ 1980 முதல் 1982 வரை பல்வேறு நிகழ்வுகள் அரசியலில் நடைபெற்றாலும், அதிமுக காங்கிரஸோடு நெருங்கி வருவதையே வேலையாக வைத்திருந்தது. காங்கிரஸும் திமுகவும் சற்று விலகியே இருந்தது.

■ பெரியகுளம் இடைத்தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளும் தனியே தேர்தலில் போட்டியிட்டது. ஆளும் அதிமுக, திமுக, காங்கிரஸ், ஜனதா. ஒரு கட்டத்தில் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவில் வெறுத்து போய் கலைஞர், அதிமுகவினர் செய்யும் அட்டூழியங்களை தந்தி மூலம் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் நடவடிக்கையே எடுக்கவில்லை. 

■ இறுதியில் 2.5 லட்சம் வாக்குகள் பெறும் அதிமுக வென்றது. திமுக சார்பில் போட்டியிட்ட  கம்பம் இராமகிருஷ்னன் 1.82 லட்சம் வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் திமுகவோடு நில்லாமல் தனியே நின்று 30000 வாக்குகளையே பெற்றது. திமுக தவிர அனைவரும் டெபாசிட் இழந்து நின்றனர். திமுக காங்கிரஸ் விரிசல் அதிகமாகி போன நேரத்தில் இந்திராவிடம் இருந்து கலைஞருக்கு அழைப்பு வருகிறது.

■ இந்திரா காந்தி அழைத்து தன் மனதில் 3 பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொருவரை பற்றியும் அபிப்ராயம் கேட்டுக்கொண்டிருந்தார். அது குடியரசு தலைவர் தேர்வு பற்றியது குறிப்பாக இந்திரா காந்தியின் மனதில் ஆர் வெங்கட்ராமனை நினைத்திருந்தார். 

(கலைஞர் இந்திரா சந்திப்பில் இந்திரா டெல்லியில் சென்ற முறை கலைஞர் சொல்லியும் இளையபெருமாளை பதவியிலிருந்து நீக்கியது நினைவிருக்கலாம். )

■ கலைஞர் மிகத்தெளிவாக பதிலளித்தார். "நீங்களும் உயர் வகுப்பு, அவரும் உயர்வகுப்பு. நாட்டில் இருபெரும் பொறுப்புகளில் உள்ளவர்கள் உயர் வகுப்பில் இருந்தால் அது சரிவராது". 

■ இந்திராவின் அடுத்த யோசனை நரசிம்மராவ். "ஏற்கனவே ஒருவர் தற்போது ஆந்திரத்தில் இருந்து வருகிறார், மீண்டும் ஆந்திரத்திலிருந்து வந்தால் ஏற்புடையதாக இருக்காது" என்றார். "இந்த முறை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்த ஒருவரை தேர்ந்தெடுங்கள்" என்றார். 

■ அப்படி பட்ட நபர் யார் என்று கேள்வி எழுப்பிய இந்திராவிற்கு கலைஞர் சொன்ன பெயர். கியானி ஜெயில் சிங்க். தவானை அழைத்து விசாரிக்கிறார் பிரதமர். பஞ்சாபில் இருந்து வந்த பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்தவர் என்று பதில் வருகிறது தவானிடமிருந்து. தனக்கே தெரியாத விஷயத்தை தெரிந்து வைத்திருக்கிறார் கலைஞர் என்று ஆச்சர்யம் இந்திராவிற்கு. 

■ கலைஞர் வழி காட்டுதலின் பேரில் இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரானார் கியானி ஜெயில் சிங்.


■ கலைஞர் கிடைக்கிற சந்தர்ப்பத்தில் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வதில் கைதேர்ந்தவர். அந்த டெல்லி சந்திப்பில் #விடுதலைபுலிகள் மற்றும் #மண்டல்_கமிஷன் விவரங்களை பற்றியும் பேசினார்.

■ 1957ல் குளித்தலை தொகுதியில் வென்ற கலைஞருக்கு 1982ல் சட்டமன்றத்தில் வெள்ளி விழா. ஒரு பிரமாண்ட விழாவை திமுக ஏற்பாடு செய்கிறது திருச்சியில். கலைஞருக்கு அனைத்து கட்சி பெரிய தலைவர்களும் புகழ் மாலை சூட்டுகின்றனர். 

■ பேராசிரியர் அன்று பேசியது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. அது தான் விழாவின் மிகப்பெரிய வாழ்த்துரை. அது தான் இன்றும் மெய்யானது. காலத்திற்கும் நிற்கக்கூடிய வாழ்த்துரை என்றே சொல்லலாம் (பேராசிரியர் பேசியது உங்களுக்காக முதல் கமெண்டில்)

■ கூட்டத்தில் அன்பில் தர்மலிங்கம் கலைஞருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். அது என்னவென்றால் திமுக சார்பில் கலைஞருக்கே தெரியாமல் பொன்னாராம் ஒன்றை செய்து ஒரு பக்கம் அண்ணா படமும் இன்னொரு பக்கம் கலைஞர் படமும் போட்ட அந்த பொன்னாரத்தை கலைஞர் மறுப்பு கூறாமல் ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

■ கலைஞர் பேசும் போது,"நானே திமுகவிற்கு சொந்தம் ஆகிவிட்ட போது அந்த பொன்னாரம் எப்படி எனக்கு சொந்தமாகும்? அன்பில் அணையிடுங்கள் என்று கூறியதால் தலைவர் என்ற முறையில் ஆணையிடுகிறேன். மொத்தம் முப்பது பதக்கங்களும் ரூபாய் 3000 விதம் 90000 ஆகிறது. எனக்காக 30 பதக்கங்களையும் எடுத்து கொண்டால் கருணாநிதி தானே  எடுத்துக்கொண்டுவிட்டான் என்ற பெயர் எனக்கு வேண்டாம். உங்கள் ஆசைக்காக 4 மட்டுமே எடுத்து செல்கிறேன். வீட்டில் பேரக்குழந்தைகளுக்கு கொடுத்து விடுவேன். மீதம் உள்ளது வைத்துக்கொண்டு 1 பதக்கத்திற்கு 1000 ரூபாய் விதம் அதிகம் கொடுத்து, 4000 கொடுத்து கொள்வார்கள் வாங்கி கொள்ளலாம், அதில் சேரும் பணத்தை நமது கட்சி வளர்ச்சி நிதிக்காக பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். அது தமிழகம் முழுவதும்  பலரது வீட்டில் இருந்தால் நமக்கெல்லாம் பெருமை அல்லவா ? 25 ஆண்டு காலம் உறுப்பினராக பணியாற்றிய கருணாநிதிக்கும் பெருமை திருச்சி மாவட்டத்திற்கும் இது பெரிய புகழை தேடிக்கொடுக்கும்" என்றார்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Credit : Muralidharan Pb

●முந்தைய பாகத்தை படிக்க;


#ThankYouகலைஞர் #ThankYouMK #Kalaignar #Karunanidhi #DMK #MGR

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺

#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Visit to Like Our Other Sites





Comments