கலைஞர் VS எம்ஜிஆர் - பாகம் : 1
●கலைஞர் கருணாநிதி 1937ல் தொடங்கி, பிற்காலத்தில் நேரடி கட்சி அரசியலில் பல போராட்டங்களை சந்தித்திருந்தாலும், அவருக்கு ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் போன்றவர்கள் அரசியிலில் எதிரியாக இருந்தாலும் மற்ற பொது நிகழ்வுகளில் நட்போடு பங்கு பெற்றனர். குறிப்பாக மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்று முழங்கிய அறிஞர் அண்ணா இருந்தவரை பல பொது மக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை காமராஜரே, பக்தவச்சலமோ,அண்ணாவோ ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
●அண்ணா,காமராஜர் தோற்றதை ரசிக்காமல் வருத்தப்பட்டார் என்பதே உண்மை. அந்த அளவிற்கு அரசியல் நாகரீகம் பொங்கிவந்தது.
இன்று 2017ல், ஒரு அரசியல் தலைவர் வீட்டு திருமண நிகழவில் கலந்து கொள்ள மாற்று கட்சி தலைவர் வந்தால் அதுவே அன்றைய தலைப்பு செய்தியானது. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது ? யார் காரணம் ?
எவ்வளவு மோசமான ஒரு கால கட்டத்தில் தமிழகம் தத்தளித்தது என்பதை சென்ற பதிவுகளில் கண்டோம்.
●அந்த சந்தர்ப்பங்களில் திமுக எப்படி எல்லாம் போராட்டங்களை சந்தித்தது, எப்படி எல்லாம் தோற்கடிக்கப்பட்டது என்பதை வரும் பதிவுகளில் குறிப்பாக எம்ஜிஆர் கலைஞர் இருவருமே எப்படி அரசியல் நடத்தினார்கள் என்பதை காண்போம்.
எங்கே.? எப்போது.?
அரசியல் நாகரீகம் காணாமல் போனது.?
●எமெர்ஜெண்சி வரலாறு நாம் அறிவோம். மினி எமெர்ஜெண்சி என்று ஒன்று தமிழகத்தில் நடந்தது. இந்திரா காந்தி அம்மையார் 1977ல் படுதோல்வி அடைந்ததும் சிறிது காலம் கழித்து தமிழகம் சுற்றுப்பயணம் என்ற செய்தி வந்தது.
●அப்போது திமுக, திக உட்பட நிறைய கட்சிகள் எமெர்ஜெண்சி போது ஏற்பட்ட கொடுமைகளை நினைவு கூறும் விதமாக இந்திராவிற்கு கருப்பு கொடி காட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டது. கருப்பு கொடி காட்டுவதென்பது ஜனநாயக முறைப்படி தமது எதிர்ப்பை நிலை நாட்ட பயன்படுத்தப் படும் செயல். இது பெரிய குற்றமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியை தவிர யார் வேண்டுமானாலும் கருப்பு கொடி போராட்டம் நடத்தலாம் ஆனால் முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். முறைப்படி கைது செய்யப்பட்டு பின்னர் அந்நாளே விடுவிக்கப்படுவர்.
●இந்திரா விமான நிலையம் வந்த போது அவருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
●விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திரா கறுப்புக்கொடி போராட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியானார். சிலர் நூற்றுக்கணக்கான புறாக்களை பிடித்து கருப்பு வண்ணம் அடித்து அதை விமான நிலைய வானில் பறக்கவிட்டனர். ஆர்.எஸ்.ஸ்ரீதரன், சைதை கிட்டு, போன்ற 25 பேர் விமான நிலையத்தில் தடியடி பட்டு பின்னர் கைதானார்கள்.
●மதுரைக்கு சென்ற இந்திரா காந்தி அங்கு கருங்கடலைப் போல் செயல்பட்ட திமுகவினரை கண்டு சற்று விரக்தியானார்.
●அங்கு சூழ்ந்திருந்த காங்கிரஸார் மிளகாய் பொடியை திமுகவினர் மீது தூவி கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் பல ஆயிரத்தில் தொண்டர்கள் குவிந்து வந்து நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்தது காவல் துறை. கிட்டத்தட்ட முழுஅடைப்பு போன்றே நடந்தது.
●சென்னையில் துப்பாக்கி சூட்டில் தீனன் என்ற தொண்டர் மரணம் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி அது இரயிலை எரிக்கும் நிலைக்கு போனது. பல இடங்களில் திமுகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பிரயோகப்படுத்தினர். மறுநாள் ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரும் துப்பாக்கி சூட்டில் சென்னை கிண்டியில் கலவரத்தின் போது பலியானார்.
●ஒரு கட்டத்திற்கு மேல் காவல்துறையினர் அனுமதி மறுக்கவே, கலைஞர் ஒரு அறிக்கையில் சென்னையில் உள்ள எல்லா இடங்களிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னதன் விளைவாக கிட்டத்தட்ட மொத்த சென்னையுமே திமுகவினரால் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஸ்தம்பித்தது.
●கலைஞரும் பேராசிரியரும் களத்தில் இறங்கி சைதை மறைமலை அடிகள் பாலம் அருகே கருப்பு கொடியோடு நின்றபோது கைது செய்யப்பட்டனர். எழும்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாள் சிறைகாவல் பெற்று சிறையில் அடைக்கப்படுகின்றனர். அக்டோபர் 30ம் நாளில் கைது. நவ 14க்கு பின்னர் மீண்டும் ஒரு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதற்கு கூறப்பட்ட காரணம் இந்திரா காந்தியை கொலை செய்யதிட்டமிட்டனர் என்று அனைத்து திமுகவினரையும் காவல் நீட்டிப்பு செய்தது அன்றைய எம்ஜிஆர் அரசு.
●முதல்வர் எம்ஜிஆர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதுமுள்ள திமுகவினர், மணியம்மை, வீரமணி உட்பட நிறைய திகவினர் கைது செய்யப்பட்டனர். சுமார் 25000 திமுகவினர் கைது நடந்தது. ஒரு அரசியல் இயக்கத்தில் இதெல்லாம் மிகச் சாதாரணம்.
●அடுத்து திமுகவினர் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. இன்று இது பற்றியெல்லாம் யாருமே பேசுவதில்லை. திமுக எவ்வளவு பெரிய மக்கள் இயக்கம் என்பதற்கு பின்வரும் நிகழ்வே ஒரு எடுத்துக்காட்டு.
●நவம்பர் 12 அன்று பெய்த பெருமழையால் தமிழகம் முழுவதும் அங்கங்கே பெரிய வெள்ளம் ஏற்பட அதிமுக அரசு(2015 போலவே) செய்வதறியாது விழி பிதுங்கியது. சாவு எண்ணிக்கை 450க்கும் மேல் சென்றது. கலைஞர் விடுத்த ஒற்றை அறிக்கையில் திமுகவினர் தமிழகம் முழுவதும் நிதி திரட்டினர்.
●நிதியாக சேர்ந்த 25000 ரூபாய் காசோலையை புலவர் கோவிந்தன், மதுராந்தகம் ஆறுமுகம், சுப்பு கொண்டு தலைமைச் செயலாளரை பார்க்க நேரம் கிடைக்காத நேரத்தில், ஆளுநர் இல்லாத போது அதை அவரது செயலாளரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தனர். அன்றைய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது ஒரு மாத சம்பளத்தை நிவார்னப் பணிகளுக்கு கொடுத்தனர். கலைஞர் திமுகவினரை போராட்டத்தை நிறுத்திவிட்டு வெள்ள நிவாரண பணிகளை செய்ய கேட்டுக்கொண்டார். அதன் படியே திமுகவினர் சேவையில் ஈடுபட்டனர்.
●புயல் ஆந்திரத்திற்கு சென்று பெரிய சேதங்களை ஏற்படுத்தியது. அதற்கும் கலைஞர் தமிழகத்தில் உள்ள திமுகவினரை 5 ரூபாய்க்கு குறையாமல் மணி ஆர்டர் மூலமாக சிறை விலாசத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு சேர்ந்த ஒரு தொகையை ஆந்திரத்திற்கு அனுப்பியும் வைத்தார்.
●சிறையில் இருந்த கலைஞருக்கு ஒரு நற்செய்தி அவரது மருமகள் சாந்தா என்றழைக்கப்படும் துர்கா ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார் என்பதே அந்த செய்தி. அதுவரை உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய கலைஞர் மகன் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
●முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த சில நல்ல விடயங்கள்.
1. ஒயிவூதியதார்கள் அவரது மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால் அவரது இணையருக்கு ஓய்வூதியம் வழங்கிட இந்தியாவிலே முதன்முதலில் உத்தரவு பிறப்பத்த முதல்வர்.
2. பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச சத்துணவு கொண்டுவந்தது.
3. உலக அளவில் இன்றும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் எம்ஜிஆர் 1978ல் துவக்கப்பட்டது.
●1977ல் ஒரே ஒரு திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஏவிபி ஆசைத்தம்பி அவர்களின் கோரிக்கையை ஏற்று அன்று அறிவித்தது தான் பாராளுமன்றத்தில் தமிழிலும் உரையாடலாம் என்பது முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. அதுவரை இந்தி மட்டுமே பேச முடியும் என்ற நிலையை தனது வாதத்தினால் ஆசைத்தம்பி வெற்றிகண்டார்.
கலைஞரின் வெள்ளி விழாவும், திருச்செந்தூர் பயணமும் அடுத்த பதிவுகளில்.
●மீண்டும் சந்திப்போம்.
Credit : Muralidharan Pb
#ThankYouகலைஞர் #ThankYouMK
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺
#கலைஞரிஸ்ட் - #kalaignarist
Visit to Like Our Other Sites
Comments
Post a Comment