கலைஞர் VS எம்ஜிஆர் - பாகம் : 3

1980 தேர்தல் - சில உண்மைகள்.

■ ஒரு மாநிலத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய ஒரு கூட்டணி ஆறே மாதங்களுக்குள் தேர்தல் நடந்திருந்தால் சுமார் 200 தொகுதிகளாவது கைப்பற்றியிருக்க வேண்டும். 

■ அப்பேற்பட்ட வெற்றி கூட்டணி படுதோல்வி அடைந்ததன் காரணம் என்ன ? எம்ஜிஆர் என்ன அவ்வளவு பலம் பொருந்தியவரா? தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி என்பது நிச்சயம் சாதனையே மறுப்பதற்கில்லை. அதன் காரணங்களை அறிந்துகொள்வதே சரி. ஆனால் தேர்தல் என்பது என்றுமே பல தொடர் நிகழ்வுகளின் பிரதிபலிப்பே. சூழல், கூட்டணி, களப்பணி, வேட்பாளர்கள், தலைவர்கள், கட்சியின் பலம், பலவீனம். இவையே தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

■ இப்போது 1980ல் திமுக ஏன் தோற்றது என்பது பற்றி ஆராய்ந்து என்ன ஆகப்போகிறது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு தெரிந்த உண்மையை சொல்வது தெரியாதவர்களுக்கு வரலாற்றை உணர்த்தும்.

■ நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு இந்திரா காந்தி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் வைக்க முடிவு செய்தார்.

■ அதன்படி தமிழக சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் குடியரசு தலைவர். அதைத் தொடர்ந்து அதிமுகவினர் செய்த அராஜகத்தால் சென்னை மற்றும் தமிழகமே அல்லலோப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் காவல் நிலையத்திற்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்தது. தமிழகம் முழுவதும் பெரிய சட்ட ஒழுங்கு சீர்குலைவு நடந்தது. 

■ குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அதிமுக அஸ்தமனமாகி காணாமல் போயிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புத்துயிர் பெற்றது அதிமுக.

● எப்படி?

■ கலைஞர் இந்திரா அம்மையார் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையை மாற்ற நினைத்தார் இந்திரா. அதன்படி ஆர் வெங்கட்ராமனிடம் பொறுப்பை கொடுத்திருந்தார் இந்திரா காந்தி அம்மையார். 


■ தொகுதிப்பங்கீடு குறித்து பேசுகையில் டெல்லியில் இந்திராவிற்கு ஒரு ஆலோசனையும் சொன்னார் கலைஞர். அதாவது ஆதிதிராவிட சமுகத்தில் பிறந்த இளையபெருமாளை நீக்கிவிட்டு MP சுப்ரமணியத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க வெங்கட்ராமன் போன்றோர் முடிவு செய்திருந்தனர்., 

■ இந்த நியமனத்தை இந்திராவிடம் மறுப்பரிசீலனை செய்யக்கேட்டுகொண்டார் கலைஞர் . காரணம் காங்கிரஸ் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோது இருந்த தலைவரை நீக்கிவிட்டு வேறொருவரை நியமித்தால் தேவையற்ற பின்னடைவு வரும் என்பது கூட்டணி கட்சித்  தலைவரான கலைஞரின் கணக்கு. வெங்கட்ராமன் அதை விரும்பவில்லை தனக்கு தோதான சுப்ரமணியத்தை கட்சி தலைவராக்க விரும்பினர்.

■ முதலில் கலைஞரிடம் கோவித்துக்கொண்ட வெங்கட்ராமன், பிறகு சமாதானமடைந்து, மிகவும் வெளிப்படையாக மூப்பனார் தலைவராக வரக்கூடாது என்றெண்ணினார். அவர் , "கலைஞரே அந்த மூப்பனுக்கு(GK மூப்பனார்) ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்" என்று சொன்ன போதே கலைஞருக்கு புரிந்துவிட்டது. 

■ ஒரு முதுபெரும் காங்கிரஸ் தலைவரிடமிருந்து இந்த மாதிரி ஒரு கருத்தை கலைஞர் எதிர்பார்க்கவில்லை.  தேர்தல் நேரத்தில் இது தேவையில்லாத பின்னடைவை ஏற்படுத்தும் என எண்ணினார். இறுதியில் வென்றது ஆர்வி. ஆனால் 15 நாட்களில் ஆர்வி நினைத்தபடி சுப்பிரமணியம் தலைவரானார். காரணம் இல்லாமல் இல்லை.

■ மேற்கூறிய இந்த சம்பவம் எதற்காக இப்போ என்று நாம் நினைக்கலாம். அதற்கு காரணம் பின்வரும்  அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ந்து படித்தால் புரியும்.

■ கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையில் நடந்த குழப்பங்களில் முதன்மையானவை முதலமைச்சர் யார் என்பதில் தான். அதாவது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் யார் அதிகமான இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களின் கட்சிக்குத் தான் முதல்வர் பதவி என்று காங்கிரஸ் கேட்டது.   திமுகவினருக்கு கலைஞரை தவிர வேறொருவரை முதல்வராக பார்க்க விருப்பமில்லை. 

■ இதனால் தேர்தல் உடன்பாடு ஏற்படாமல் போனது.ஆனால் ஆர்வி தனக்கு நெருக்கமான MP சுப்பிரமணியத்தை தலைவராக்கி தேர்தலில் வென்றால் முதல்வராக்க நினைத்தார்.

■ இறுதியில் இந்திரா காந்தி விவரத்தை புரிந்துக்கொண்டு  கலைஞர் தான் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் என உறுதிபட தெரிவித்தார்.

■ திமுக செய்த மாபெரும் பிழை என்னவென்றால் 116 தொகுதிகளை சரிசமமாக தொகுதிப்பங்கீடு திமுகவும் காங்கிரஸும் செய்துகொண்டனர். 

■ மேலும் மகோராவின் கிளிசரின் தேர்தலில் அவருக்கு 129 தொகுதிகள் பெற்றுக் கொடுத்து மீண்டும் முதல்வரானார். தவறான தேர்தல் கணக்கு, காங்கிரஸின் உட்கட்சி குழப்பங்கள் போன்றவையும் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்விக்கு ஒரு சில முக்கிய காரணங்கள்.  மேலும் அதிமுக மீது மக்களிடத்தே பெரிய அனுதாபம் ஏற்பட்டது

■ மேலும் குழப்பங்களுக்கே பேர்போன காங்கிரஸில் பல கோஷ்டிக்கள் வெங்கட்ராமன்,மூப்பனார், இளையபெருமாள் என்று பிரிந்து சரியான தேர்தல் வேலையை செய்யாமல் போனதும் ஒரு பெரிய காரணம்.

■ கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இரவு பகல் பாராமல் உழைத்த திமுகவினர் பெருத்த தோல்வியை சந்தித்தனர். அதிமுக கூட்டணி வாங்கியது 92 லட்சம், திமுக கூட்டணி 83 லட்சம் வாக்குகளை பெற்றது. அதிமுக கூட்டணி 49.23%, திமுக கூட்டணி 44.47%. வெறும் 4.76% வாக்குகளில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

■ ராமாவரம் தோட்டத்திலிருந்து ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தொலைபேசியில் வருகிறது மகோராவிடமிருந்து. நன்றி கூறிய கலைஞர் அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். 

■ பெரும் தோல்விக்கு பின்னால் கலைஞர் கருணாநிதியின் 57வது பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. அதில் என்ன பேசினார் கலைஞர்(முதல் கமெண்டில்) 

■ 1980ல் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இளைஞர் அணி தொடக்க விழா. மதுரையில் நடந்த அந்த பெரிய விழாவில் பெரிய தலைவர்களின் ஆசியோடு இளைஞர் அணி உருவானது.

■ தேர்தல் தோல்வியை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள ஒரு பெரிய மனது வேண்டும். இன்றும் பல வெற்றி தோல்விகளை சந்தித்த கலைஞருக்கு ஆறுதல் உடன்பிறப்புகள், உடன்பிறப்புகளுக்கு அவர்களின் தலைவர் ஆறுதல். இதுவே திமுகவின் ஊந்து சக்தி. 

■ இந்த உந்துதலினால் தான் திமுக என்ற ஆலமரம் தழைத்து விழுதுகள் விட்டு பலமாக உள்ளது. இது திமுகவினரின் கெத்து என்றே சொல்லலாம்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

முந்தைய பாகத்தை படிக்க;


அடுத்த பாகத்தை படிக்க;


Credit : Muralidharan Pb

#ThankYouகலைஞர் #ThankYouMK #Karunanidhi #MGR #DMK 

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺

#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Visit to Like Our Other Sites





Comments