கலைஞர் VS எம்ஜிஆர் - பாகம் : 4

தவறிழைத்த முதல்வர் - தட்டிக்கேட்ட எதிர்கட்சித் தலைவர்.

■ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு மூன்று சம்பவங்களை எடுத்துக்கொள்ளலாம். சட்டசபையிலும், வெளியிடத்திலும் கலைஞர் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

■தேர்தலில் மகோராவின் இரட்டை இலை வெற்றி பெற்றாலும் அதை சுட்டெரிக்கும் சூரியனாக திமுக விளங்கியது. மகோராவிற்கு மக்கள் செல்வாக்கு மட்டுமில்லை என்றால் எப்போதோ விஜயகாந்த் போல காணாமல் போயிருப்பார்.

■1980 ஆண்டின் இறுதிநாளில் ஒரு மாபெரும் முழுஅடைப்பை மாநிலம் முழுவதுமாக பல்வேறு காரணங்களுக்காக விவசாயத் தலைவர் நாராயணசாமி நாயுடு கைதை தொடர்ந்து நடந்தது. புது டெல்லி சென்று பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்களை சந்தித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக அந்த சட்டத்தை உபயோகம் செய்ய மாட்டேன் என்று முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.

■முதல்வர் எம்ஜிஆர் நாராயணசாமி மீது கடுங்கோபம் கொண்டிருந்தார். காரணம் எம்ஜிஆர் நேரம் கேட்டு நாராயணசாமி பார்க்க ஒப்புக்கொள்ளவில்லை. கலைஞர் கேட்டவுடன் ஒப்புக்கொண்டது மேலும் முதல்வருக்கு எரிச்சல். 

■காவலர்களின் இரும்பு கரங்களால் தமிழகம் முழுவதும் 20000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்தே முழு அடைப்பு. 4 இடங்களில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் இறந்தனர். போலிஸ் தரப்பில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

■அதிமுகவில் அந்த கட்சிக்காரர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று பலரும் கேட்பார்கள். எம்ஜிஆர் மீது பாசம் ஒரு பக்கம் இருந்தாலும் கீழ்கண்ட காரணமே மிக முக்கியம்.

■ஒரே நாளில் 24000 கிராம அதிகாரிகளை நீக்கி உத்தரவிட்டார் முதல்வர் எம்ஜிஆர். ஊராட்சி மன்றங்களில் 12000 பேரை நீக்கியது அரசு. அதே போல கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் துரத்தப்பட்டு அந்த இடங்களில் எல்லாமே அதிமுக கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இது எந்த நியாயத்திற்கும் பொருந்தாத ஒரு செயல். தொண்டர்களை திருப்தி செய்யவே எம்ஜிஆர் கையாண்ட உத்தி. அதனாலேயே தொண்டர்கள் அடிமை சாசனமாக அந்த காட்சியிலேயே பழியாக கிடக்கிறார்கள். குறுக்கு வழியில் வாழ்வு வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர்.

■இந்த அனைத்து விவரங்களை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை விமான நிலையத்தில் சென்று சந்திக்க முற்படுகிறார். சைதாப்பேட்டையில் அவரது காரை அதிமுகவினர் மறிக்க முயல்கிறார்கள், முடியாமல் போகவே விமான நிலையத்தில் போலீசாரால் தடுக்கப்பட, அவர்கள் கலைஞரின் கைகளை முறுக்க முயன்ற போதும்  அவர்களையும் ஏமாற்றிவிட்டு இந்திராவை பார்த்து மனு கொடுக்கிறார்.



■இந்திரா மாலையில் சந்திக்க நேரம் கொடுக்கிறார். இந்திரா மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு சென்று வந்து மாலையில் அனைத்து விவரங்களையும் கலைஞர் வாயிலாக கேட்டறிந்து மறுநாள் தமிழக அரசிடம் வலியுறுத்தி சிறையில் இருக்கும் அனைவருமே விடுதலையாகிறார்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியதை அன்றைய பிரதமர் கூட காது கொடுத்து கேட்டார்.

■நவம்பர் 1980ல் திருச்செந்தூர் முருகன் கோவில் உதவி ஆணையாளர் கொலை அன்றைய ஆளும் காட்சியனாரால் கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆனால்  தற்கொலை என்று முடிவு செய்து மறைக்க பார்த்தனர் ஆளும் கட்சி கோவில் நிர்வாகிகள். இதை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் எம்ஜிஆர் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு சிஜெஆர் பால் என்ற நீதிபதி மூலமாக விசாரணை கமிஷன் அமைத்தார்.

■மகோராவின் கெட்ட நேரம் அந்த நீதிபதி உண்மையை கண்டறிந்து குற்றவாளிகள் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இதை வெளிக் கொண்டுவந்தால் தனது நற்பெயர் கெட்டுவிடும் என்று எம்ஜிஆர் அதை மறைத்து விட்டார்.

■கலைஞர் எவ்வளவு பெரிய பேராற்றல் உடையவர் என்பதை இதன் மூலம் அறியலாம். அந்த அறிக்கை கூறிய உண்மைகளை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். இதை ஒப்புக்கொள்ளாத எம்ஜிஆர் கலைஞர் மீதே நடவடிக்கை எடுத்தார்.

■முரசொலி அலுவலகம், கலைஞர் வீடு, உதவியாளர் சண்முகநாதன் வீடு அனைத்து இடங்களில் சோதனை நடத்தி தானே வந்து வலையில் சிக்கியது தமிழக அரசு.  முரசொலி செல்வம், சண்முகநாதன்,  அரசு அதிகாரி சதாசிவம்  போன்றவர்களை கைது செய்தது காவல்துறை.

■முதல் குற்றவாளியாக சதாசிவம், மற்றவர்களும் சேர்க்கப்பட்டு இறுதியில் நான்காவது குற்றவாளியாக எதிர்க்கட்சி தலைவர் கலைஞரும் சேர்க்கப்பட்டார். சில நாட்களில்  மீண்டும் அதே பணியில் தொடர்கிறார் சதாசிவம்.

■பிப்ரவரி 1982ல், கலைஞர் இது பற்றி சட்டமன்றத்தில் பேச முற்பட்டபோது அவரை உதாசினப் படுத்தியது அறநிலையத்துறை. குற்றப்புலனாய்வு துறை மட்டுமே இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த முடியும் என்று துறை அமைச்சர் ஆர்எம் வீரப்பன் பதிலளித்தார்.

■எவ்வளவு கேவலமான ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்திருக்கோம் என்பது இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு அரசே ஒரு நீதியரசர் மூலம் சமர்ப்பித்த விசாரணை கமிஷனை வெளியிடாமல், எதிர்க்கட்சி வெளியிட்ட பின்னரும் தவறை ஒப்புக்கொள்ளாமல் மீண்டும் புலனாய்வு துறை விசாரிக்கும் என்று நா கூசாமல் பித்தலாட்டம் செய்கிறது?



■இதற்கு பிறகும் கலைஞர் சும்மா விடவில்லை. நீதி கேட்டு நெடும்பயணம் போனார். ஆம். மதுரையில் ஆரம்பித்து திருச்செந்தூர் வரை 200 கிலோமீட்டர் நடந்தே சென்று மக்களுக்கு மேடை போட்டு விளக்கி, 8 நாட்கள் நடந்து சென்று, காலில் கொப்புளங்கள் வந்தும், நடந்தே சுமார் 15 லட்சம் மக்களை சந்தித்து, தனிப்பட்ட அரசு அதிகரிக்கும் ஆளும் கட்சிக்கும் நடந்த தகராறில் அநீதி இழைக்கப்பட்டு, எதிர்க்கட்சி தலைவராக சென்று மக்களிடத்தே எடுத்து சொல்லி, பின்னர் ஒரு நாளில் திமுக சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் இறந்து போன சுப்ரமணியபிள்ளை குடும்பத்தாரை வரவழைத்து அவர் பிள்ளைக்கு கல்விக்காக நிதியாக 50000 ரூபாய் கொடுத்து உதவினார்.




■ஒரு நார்த்திகரான கலைஞர் ஒரு கோவில் நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை புரிந்தார்.

■அப்பேர்பட்டவருக்கு வந்தது ஒரு பெரிய தொல்லை. அதை எப்படி திருப்பி அடித்து விரட்டினார் என்பது வரலாறு. பார்க்க முதல் கமெண்ட்டில்.

●நன்றி மீண்டும் சந்திப்போம்.

Credit :Muralidharan Pb

●முந்தைய பாகத்தை படிக்க;

பாகம் : 3

●அடுத்த பாகத்தை படிக்க;

பாகம் : 5

#ThankYouகலைஞர் #ThankYouMK

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺

#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Visit to Like Our Other Sites

YouTube Channel

Facebook Page

Twitter

Instagram

Blog

Comments