கலைஞர் VS எம்ஜிஆர் - பாகம் : 2

நான்ஆணையிட்டால்
(எம்ஜிஆர் போட்ட சவால்

■தமிழகத்தை பொறுத்த வரை, 1978 முதல் 1984 வரை பல திடீர் திருப்பங்கள் நிறைந்த அரசியல் காலம் என்று சொல்லலாம். காரணம் இன்றைய மக்களுக்கு தெரியாத பல நிகழ்வுகள் நடந்தேறியது. 

■இன்று இரண்டு அணியும் இணைந்தது போல அன்று பிரிந்த அதிமுகவை மீண்டும் திமுகவில் இணைக்க முயற்சிகளை சில முதன்மை அரசியல் தலைவர்கள் விரும்பினார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒரிஸ்ஸா அரசியல்தலைவர் பிஜு பட்நாயக்கும் ஒருவர். 


■கலைஞரிடம் நன்மதிப்பை பெற்றிருந்த அவர் ஒரு நாள் சென்னை வந்து கலைஞரிடம் இது பற்றி பேசினார். கலைஞரும் சில நிபந்தனைகளோடு ஒப்புதல் அளித்தார். மகோராவிடம் இது தெரிவிக்கப்படவே முதலில் தயங்கிய அவர் பின்னர் ஒப்புக்கொண்டார். 

■பிஜு, பேராசிரியர், நாவலர் உட்பட மற்ற தலைவர்கள் வேறொரு அறையில் காத்திருக்க மகோராவும் கலைஞரும் தனிமையில் சென்னை விருந்தினர் மாளிகையில்  சுமார் 2 மணி நேரம் பேசினார்கள். அதன் பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டது. 

●கலைஞர் போட்ட நிபந்தனைகள்:

■இரு காட்சிகள் இணைந்தாலும் கட்சிக்கு திமுக என்றே பெயரிருக்கும்,
கொடி அதிமுக கொடியோடே கூட இருக்கலாம்,

■முதல்வராக எம்ஜிஆர் தொடர்வார்,
குறிப்பாக இரு காட்சிகள் இணைந்தாலும் இப்போது திமுகவில் உள்ள எந்த சட்டமன்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி தேவையில்லை.

■கட்சி தலைமையில் கலைஞரும் இருக்க வேண்டுமென நிர்பந்தம் இல்லை. இரு காட்சிகள் இணைந்த பின்னர் தலைமை, பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என பிறகு பொதுக்குழுக்கூட்டி முடிவெடுத்தக்கலாம்.


■ஆனால் முக்கியமான விடயம்; எம்ஜிஆர் கொண்டுவந்த இடஒதுக்கீடு சீர்திருத்தத்தை திரும்ப பெறவேண்டும். அதாவது 9000 ஆண்டு வருமானத்திற்கு மேல் உள்ளவர்கள் இட ஒதுக்கீட்டுக்குள் வரமாட்டார்கள். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். 

■முதலில் எம்ஜிஆர் கலைஞரிடம்  இதெல்லாம் உண்மைதானா என்று கேட்டுவிட்டு வியந்தார்.  குறிப்பிட்ட நாளில் வெவ்வேறு இடங்களில் இரண்டு கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடி, ஒப்புதல் பெற்று நாம் காட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என்று மகோரா அறுதியிட்டு கூறினார். 

■ஒப்புக்கொண்ட எம்ஜிஆர் பின்னர் வேலூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற போது இது குறித்து எம்ஜிஆர் ஏதும் பேசவில்லை. அதுமட்டுமல்ல அவரது கட்சிக்காரர்கள் எம்ஜிஆர்ஐ  மேடையில் வைத்துக்கொண்டே திமுகவினரையும் குறிப்பாக கலைஞரையும் தரக்குறைவாக பேசினார்கள்.  

■காரணம் முன்னாளில் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மூப்பனாரை எம்ஜிஆர் சந்திக்கிறார். பிறகே இணைப்பு முயற்சியை கைவிடுகிறார். நடுவில் என்ன நடந்தது என அவரவர் கற்பனைக்கே விட்டுவிடுவோம். 

■இதை சரியாக புரிந்துகொள்ளாமல் பிஜு பட்நாயக் கலைஞர் தான் மாற்றி பேசுவதாக எண்ணினார். பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் உண்மையில் எம்ஜிஆர் தான் இந்த இணைப்பிற்கு பிடி கொடுக்கவில்லை என்கிற உண்மையை உணர்ந்துக் கொண்டார்.

■இது ஒருபுறமிருக்கு இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவரான ஸ்டீபன் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து கலைஞரை இந்திரா அம்மையார் சந்திக்க விருப்பப்படுகிறார் என தூது அனுப்புகிறார். கலைஞர் டெல்லி சென்றபோது இந்திராவையும் சந்தித்துவிட்டு வருகிறார். அது அரசியலில் பெரிய திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு.

■மற்றொரு சந்தர்பத்தில் ஒரு சமயம் ஜனதா பிரதமர் மொரார்ஜி தேசாய் ஹிந்தி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தார் .  சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது வீழ்ந்த குதிரை என நக்கல் அடித்தார்.

■கலைஞர் அதற்கு பதிலாக சொன்னது,
"வீழ்ந்த குதிரை அல்ல களைப்பாரும் குதிரை. இம்முறை இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிகவும் வேகமாக ஓடி இலக்கை அடையக் கூடிய குதிரை" என்று பதிலடி தந்தார். முதல்வர்  எம்ஜிஆர் அதற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. 

■அந்த நேரத்தில் திருச்சியில் ஒரு மாநாடு திமுக சார்பில் நடக்கிறது. திருச்சி எப்போதுமே திமுகவிற்கு திருப்புமுனை தான். இந்த  முறை ஹிந்தி திணிப்பை கையில் எடுத்த ஜனதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் படியாக ஜனவரி 25 அன்று துக்கத்தினமாக அனுஷ்டிக்க முடிவெடுக்கப்படுகிறது. ஜனவரி 26 குடியரசு நாள் அன்று கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் போகவும் முடிவெடுக்கப்படுகிறது. 

■இதை அறிந்துகொண்ட எம்ஜிஆர் கோவையில் கட்சி சார்பாக பிரமாண்ட போட்டி  மாநாடு  ஒன்றை 
ஏற்பாடு செய்கிறார். இதில் நகை முரண் என்னவென்றால் முதல் நாள் ஒட்டிய சுவரொட்டியில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் மாநாடு என்றிருந்தது. கடைசியாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வீர் வணக்க மாநாடு என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தைரியசாலி எம்ஜிஆர்.

■அந்த நேரத்தில் புகைந்த பெரிய பிரச்சனை புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 
அந்த மாநில மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

■எம்ஜிஆர் இதைப் பற்றி கூறுகையில் மக்கள் எல்லாவற்றிக்கும் தான் எதிர்ப்பை காண்பிப்பார்கள். எனினும் மக்கள் விருப்பத்தை நான் மதிக்கிறேன் என்று பட்டும் படாமல் பதிலளித்தார். கலைஞரிடம் கேட்டபோது அந்த மாநில அரசியில் கட்சிகளின் கருத்தையும் மக்கள் கருத்தையும் கேட்டால் மட்டுமே இது பற்றி கருத்து கூற முடியும் என்று கூறினார். 

■புதுவை அதுவரை பார்த்திராத வன்முறை சம்பவங்கள் நடந்து, ஊரடங்கு சட்டம் போடப்பட்டு, கலவரத்தில் இருவர் உயிரிழிந்தது தான் பெரும் சோகம்.

■தேர்தல் நெருக்கத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், "இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி இந்தியாவின் நலைத்த தன்மைக்கும், ஜனநாயகம் கேலிக்கூத்தாகமல் இருப்பதற்கும், மக்கள் விரோத அதிமுகவிற்கு பாடம் புகட்டவும் இந்த கூட்டணி உருவாகும் என்று பதிலளித்தார்.  

■காரைக்காலில் ஒரு பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் ஒரு சவால் விட்டார். 
"கருணாநிதி அவர்களே, உங்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்த எதையும் பேசாதீர்கள். இந்திராவுடன் கூட்டுச்சேர்ந்தால் ஒரு சவால் விடுகிறேன். 1977 தேர்தலில் நாங்கள் இந்திரா காங்கிரஸோடு சேர்ந்த போது பெற்ற வெற்றியை நீங்கள் பெற முடியுமா ? 35 இடங்கள் நாங்கள் பெற்றோம். நீங்கள் உண்மையான தமிழன் என்றால், திராவிடத் தொண்டன் என்றால், அத்தனை இடங்களையும் வெல்லுங்கள். மேட்டில் நிறுத்தி மாலை போடுகிறேன். இதை அகங்காரமாக சொல்லவில்லை. கருணாநிதியால் இது முடியாது. 1971ல் 25 எம்பிக்கள் வைத்திருந்த உங்களில் ஒருவர் டெல்லி மந்திரி சபையில் உட்கார முடிந்ததா ? தினத்தந்தியில் இது வெளியானது.

■அடுத்த வாரமே இதை புரிந்துகொண்ட எம்ஜிஆர் டெல்லியில் இந்திராவை சந்திக்க முயற்சி மேற்கொள்ளுகிறார். டெல்லியில் மற்ற ஜனதா பிரமுகர்களை சந்திக்கும் மகோராவிற்கு இந்திராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் திமுக கூட்டணி உருவானது. அக்கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது வரலாறு. 

நன்றி மீண்டும் சந்திப்போம் 
அடுத்து: கலைஞரின் வெள்ளிவிழா

முந்தைய பாகத்தை படிக்க;


அடுத்த பாகத்தை படிக்க;


Credit :Muralidharan Pb

#ThankYouகலைஞர் #ThankYouMK

#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺

#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Visit to Like Our Other Sites





Comments